தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடனான சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026 திங்கட்கிழமை மதிப்பிற்குரிய பிரதேசசெயலாளர் திரு.F.C.சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு. க.இளங்குமரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் சு.சிறிக்குமரன் மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். மாணவர்களிற்கான "சிப்தொர" புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் 114 மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு புலமைப்பரிசிலுக்கான சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசமட்ட தலைவர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
![]() |
![]() |
தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நான்கு சமுர்த்தி வங்கிகளிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வலுவூட்டலிற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கான உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு 01.09.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் வளவாளர்களாக நல்லூர் பிரதேசசெயலக உளவியல் உளவளத்துணை உத்தியோகத்தர் திரு.கே.தர்மசேகரம் மற்றும் சங்கானை பிரதேசசெயலக உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி.அ.மீராஜினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 04 சக்கரநாற்காலிகள் மற்றும் 01 கழிவுக்கல சக்கர நாற்காலி ஆகியன மாற்றுத்திறனாளிகளுக்கு 17.08.2026 இன்று உதவிப்பிரதேச செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரால் வழங்கப்பட்டன.
![]() ![]() |
பிரதேச காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்கூட்டம் மற்றும் பிரதேச காணிப் பயன்பாட்டுத்திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் 17.08.2026ம் திகதி மு.ப 10.15 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி நகரசபை தவிசாளர், சாவகச்சேரி கமநல சேவைகள் நிலைய பெரும்பாக உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர், கைதடி கமநல சேவைகள் நிலைய விவசாய போதனாசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வன பரிபாலனத் திணைக்கள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், காணிக்கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





















