கொடிகாமம் மத்தி, கொடிகாமம் தெற்கு மற்றும் கொடிகாமம் வடக்கு ஆகிய கிராமங்களில் ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான கலந்துரையாடல் 2025.09.24 காலை 9 மணிக்கு பிரதேச செயலாளர் திரு F. C சத்திய சோதி தலைமையில் நடைபெற்றது. இதன் போது கொடிகாமம் நாவலடி தொடக்கம் எருவன் வயல் வெளி வரையான வெள்ள நீர் வெளியேறும் வாய்க்கால் பிரதேச மக்கள் பங்கேற்புடன் சிரமதான முறையில் துப்பரவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இப் பணியை நிறைவு செய்ய "உலக தரிசனம்" நிறுவனமானது நிதி பங்களிப்பு செய்யவுள்ளது. இந்த கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வட்டார உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

WhatsApp Image 2025 09 24 at 9.26.31 PM WhatsApp Image 2025 09 25 at 9.42.05 AM

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top