தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொடிகாமம் சமுர்த்தி வங்கி மற்றும் world vision நிறுவனம் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 16.10.2026 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு யா/எழுதுமட்டுவாழ் ஸ்ரீகணேசா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு. க.இளங்குமரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி மற்றும் பாடசாலை அதிபர் திரு.ச.துளசிதாஸ் , ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக கிராமசக்தி இணைப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் , முகாமைத்துவப் பணிப்பாளர் , வங்கி முகாமையாளர் , world vision உத்தியோகத்தர் , கட்டுப்பாட்டு சபை தலைவர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் . மாணவர்களிற்கான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. தொடர்ந்து மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், CBO தலைவர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
![]() |
|















