Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

Anthem

தொன்மை நிறை தென்மராட்சி நன் நிலமிது

துறைதோறும் வாழியவே​

தோள் வலியாலே நாளும் உழைப்பவர்

தொழில் நலம் வாழியவே

-    தொன்மை

 

​​பொன் கொழிக்கும் வளம் பொலிந்து சிறந்து

புகழுடன் வாழியவே

பூரண செல்வம், கல்வி, விளையாட்டு

புதுமை பெற்றோங்கிடவே

-    தொன்மை

 

கடல்வளம், கழனிகள், கரும்பின, மா, தென்னை

கனிசொரி வாழை, பலா

காட்சிக்கினி வள நாடெனப் போற்றிடும்

கற்பகம் வாழியவே

-    தொன்மை

 

உடற்பலம் வீரம் உயர்ந்த மெய் ஞானம்

ஓங்கிய எம் நாடு

இறைவழி பாடோடியலிசை கூத்துகள்

இயங்கும் கலைக் கோயில்

-    தொன்மை

 

எங்கள் தமிழ்க் குல மறவர்கள் வீரம்

எழில்செய் நிலை வாயில்

மங்களம் பாடி மகிழ்ந்து விருந்திடும்

மாண்புறு நன்றாய் இல்

-    தொன்மை

 

ஆக்கம் : கல்வயல் கவிமாமணி திரு.வே.குமாரசுவாமி

 

DS Office - Opening Hours

Main Library

Monday 08.30 - 4.15
Tuesday 08.30 - 4.15
Wednesday 08.30 - 4.15
Thursday 08.30 - 4.15
Friday 08.30 - 4.15
Saturday -
Sunday -