2026ம் ஆண்டின் முதலாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் 24.02.2026 ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு. F.C சத்தியசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திரு. செ. ரமேஸ்குமார் பிரதம உள்ளக கணக்காய்வாளர், திருமதி.வி.பிறேமதாஸ் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், பிரதேசசெயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், விடய உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் இவ்வாண்டிற்கான முதலாவது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இது எனவும் பிரதேச செயலகத்தின் நிதி, நிர்வாக, செயற்பாடுகள் நிதிபிரமாணங்கள், தாபன விதிகளுக்கமைவாக உள்ளக கட்டுப்பாட்டினை சிறந்த முறையில் பின்பற்றி பிரதேச செயலக செயற்பாடுகளின் தவறுகளை திருத்தம் செய்வதுடன் இனிவரும் காலங்களில் குறித்த தவறுகள் மீளவும் ஏற்படாமல் வினைத்திறனாக செயற்படுவது அவசியமாகும் என்பதுடன் பொது கணக்காய்வு ஐயவினாக்களை குறைப்பதற்கு உள்ளக கணக்காய்வு செயற்பாடு அவசியமெனவும் குறிப்பிட்டார்.
பிரதம உள்ளக கணக்காய்வாளர் மாவட்ட மட்டத்தில் உள்ளக கணக்காய்வின் செயற்பாடு தேசிய கணக்காய்வின் அவதானிப்புகளை குறைப்பதுடன் மீளவும் ஒரே தவறுகள் எழாமல் வினைத்திறனாக செயற்படவேண்டுமென அரசாங்க அதிபரும் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் வருடாந்த கணக்காய்வு திட்டம் வருட ஆரம்பத்தில் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கும் சமர்ப்பிப்பதனால் உள்ளக கணக்காய்வு மற்றும் தேசிய கணக்காய்வு உடன்பாட்டுடன் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் பெறுகை நடைமுறை, சமூகபாதுகாப்புத் திட்டம், நிதிநடைமுறைகளில் கூடுதலான அவதானம் செலுத்த வேண்டுமெனவும் கூறினார். அலுவலக கடமை அசைவுகள் களவிஜயம் போன்றன தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டுமெனவும் கூறினார். தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் கருத்து தெரிவிக்கையில் பொது கணக்காய்விற்கான பதில்கள் திருப்தியாக வழங்கப்படல் வேண்டும் எனவும் மேலும் சமூக பாதுகாப்பு நிதிய முன்னேற்றச் செயற்பாட்டுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் பொருளாதார மத்திய நிலைய செயற்பாடுகள் முழுமையடைதல் வேண்டும் எனவும் இலவச மின்விநியோகம், வீட்டுத்திட்டம் போன்றனவற்றின் இறுதி முடிவுகள் உறுதிப்படுத்தப்படல் வேணடுமெனவும் குறிப்பிட்டார். இத்துடன் சென்ற வருட முன்னேற்ற அறிக்கை Presentation மூலம் காட்சிப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டதுடன் 11.00 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
 WhatsApp Image 2026 02 27 at 09.35.58 1  WhatsApp Image 2026 02 27 at 09.35.57

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top