துாரநோக்கு

இலங்கையின் முதன்மைத் தரத்திலான பொதுச்சேவை

 

 

பணிக்கூற்று 

வினைத்திறன் மிக்க வளப்பயன்பாட்டின் ஊடாக தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் சமூக, கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைவான அதியுன்னத சேவையை பிரதேசத்தின் சேவை பெறுநருக்கு வழங்குதல்

 



சமூக, பொருளாதாரப் பின்னணி


தென்மராட்சிப் பிரதேச செயலகமானது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இதன் பிரிவு எல்லைகளாக வடக்கே தொண்டைமானாறு கடல் நீரேரியும் கரவெட்டி பிரதேச செயலகமும், கிழக்கே பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், தெற்கே யாழ்குடா கடல் நீரேரியும் பூநகரி பிரதேச செயலகமும், மேற்கே நாவற்குழி- செம்மணிப் பாலமும் உப்பாறு கடல் நீரேரியும் காணப்படுகிறது.யாழ் மாவட்டத்தில் பரந்ததொரு நிலப்பரப்பை உள்ளடக்கியதும், தனித்துவமான பல பண்புகளைக் கொண்டதுமாக தென்மராட்சிப் பிரதேசம் உள்ளது. இம் மாவட்டத்தின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பினை வழங்குவதாக இப்பிரதேசம் உள்ளது. நெல், பழவகை, தென்னை என்பன அதிகளவில் இங்கு செய்கை பண்ணப்படுகிறது. வானுயர்ந்த மரங்களும், வளமுடைய நிலங்களும், நீர் நிலைகளும்,  வயல் வெளிப்பயிர்களும் என பேரெழில் பெற்று விளங்குகின்றது இப் பிரதேசம்.

தென்மராட்சிப் பிரதேசம் 232.19 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டு யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதேச செயலகமாக காணப்படுகிறது. அதாவது மாவட்டத்தின் 22.5% நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டதாக உள்ளது. தென்மராட்சி பௌதீக ரீதியாக சமதரைப் பாங்கானதாக காணப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் மணல் மண் மேற்பரப்பாக காணப்படுகிறது. இங்கு ஆறுகளோ மலைகளோ காணப்படாத போதிலும் பற்றைக் காடுகளும் சிறுகுளங்க​ளும் காணப்படுகின்றன. யாழ் குடாநாட்டின் பாறை அமைப்பிற்கேற்றவாறு இப்பிரதேசத்தில் தரைக்கீழ் நீர்வளமே உள்ளது. எனினும் சில பகுதிகளில் கனியங்களின் செறிவு காரணமாக நீர் பழுப்பு நிறங்கொண்டதாகவும் அடத்தி கூடியதாகவும் உள்ளது. இப்பிரதேசத்தின் சில பகுதிகளில் செம்மண் தொகுதியும் காணப்படுகிறது.

தென்மராட்சிப் பிரதேச  செயலகமானது 60 கிராம சேவகர் பிரிவுகளையும் 130 கிராமங்களையும் கொண்டமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசம் சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை என்ற இரு உள்ளூராட்சி அலகுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் சாவகச்சேரி நகரசபை 11 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி 19.40 சதுர கிலோ மீற்றர் பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகுதி 49 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்ட 200.90சதுர கிலோ மீற்றர் பரப்பு சாவகச்சேரி பிரதேச சபைக்குள் அடங்குகிறது. தென்மராட்சிப் பிரதேச செயலகம் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்குள் அடங்குகிறது.

தென்மராட்சிப்பிரதேசமானது இலங்கையின் உலர் வயத்தில் காணப்படுகிறது. அத்துடன் நவம்பர் தொடக்கம் ஜனவரி வரையான மாதங்களில் வடகிழக்குப் பருவ மழைவீழ்ச்சியினைப் பெற்றுக்கொள்கிறது. இம் மழைவீழ்ச்சியானது நெற்பயிர்ச்செய்கைக்கும் நிலத்தடி நீர் சேகரிப்பிற்கும் உதவியாக உள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் நீர்  ஏனைய பருவகாலங்களில் கிணறுகளின் மூலம் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

தென்மராட்சிப் பிரதேசமானது யாழ் மாவட்ட விவசாய உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. இதனால் யாழ் மாவட்டத்தின் உணவுக் களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறது. தென்மராட்சிப் பிரதேசமானது மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என்பவற்றிற்குப் பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது. இங்கு தென்னை வளமும் காணப்படுகிறது. அத்துடன் கடந்த கால யுத்தத்தினால் பெருமளவு தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளன. இங்கு பெருமளவு நெல் சாகுபடி செய்யப்படுவதுடன் தானியங்களும் மரக்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கோடை காலங்களில் கிணற்று நீரைப்பயன்படுத்தி பயிற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.

தென்மராட்சிப் பிரதேசமானது யாழ் மாவட்டத்தினை ஏனைய மாவட்டங்களுடன் இணைக்கும் A9 வீதியினையும் உள்ளடக்குகிறது. அத்துடன் கொடிகாமம்- பருத்தித்துறை வீதி, சாவகச்சேரி- பருத்தித்துறை வீதி, மீசாலை- புத்தூர்ச்சந்தி வீதி, கேரதீவு ஊடாக சாவகச்சேரி-பூநகரி வீதி ஆகிய பிரதான வீதிகளையும் கொண்டுள்ளது.

 

கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் பட்டியல்

பெயர் பதவி தொடக்கம் வரை
திரு.றாமனாதர் சிதம்பரபிள்ளை DRO
திரு. சுப்ரமணியம் முருகவேல் AGA
திரு. கனகசபை துரைராசா AGA 01.07.1979     31.12.1985
திரு.புன்னியர் சுந்தரம்பிள்ளை AGA/DS 01.04.1987 05.05.2002
திரு.கதிரவேலு கேதீஸ்வரன் DS 19.01.2003 08.07.2003
திரு.செல்லமுத்து ஸ்ரீனிவாசன் DS 09.07.2003 11.10.2010
திருமதி. அஞ்சலிதேவி சாந்தசீலன் DS 23.10.2010 01.01.2017
திருமதி.தேவந்தினி பாபு DS 11.01.2017  25.02.2020
திருமதி உஷா சுபலிங்கம் DS 26.02.2020 01.09.2025
திரு.எப் சி சத்தியசோதி DS 01-09.2025 இன்று வரை

பிரதேச செயலக பிரிவுகளின் தள வரைபடம்

 g.s.division map

 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top