இரண்டாம் காலாண்டுக்குரிய பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கூட்டமானது 2026.06.18 (வியாழக்கிழமை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் F.C .சத்தியசோதி அவர்கள் தலைமையில் பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கூட்டத்தில் வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரி (சாவகச்சேரி), சுகாதார பணிமனை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் (கொடிகாமம்), மதுவரி உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 WhatsApp Image 2026 06 19 at 8.32.43 AM 2  WhatsApp Image 2026 06 19 at 8.32.43 AM 1
 WhatsApp Image 2026 06 19 at 8.32.44 AM  WhatsApp Image 2026 06 19 at 8.32.44 AM 1

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது 16.06.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.லாகினி நிருபராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டார். இப் பயிற்சிநெறியில் கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர் .

 WhatsApp Image 2026 06 17 at 3.41.21 PM WhatsApp Image 2026 06 17 at 3.41.20 PM 
மது பிரிவில் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ரூபாய் 2 மில்லியன் பெறுமதியான வீடமைத்தலுக்காக கட்டம் III ல் தெரிவு செய்யப்பட்ட 27 குடும்பத்தினருக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு காசோலை வழங்குதலும் மற்றும் வீடமைத்தல் வழிகாட்டல் அறிவுறுத்தல் வழங்குதலும் 03.06.2026 புதன் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்டம் III ல் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டதுடன் இவர்களுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவான 400,000 ரூபாவிற்கான காசோலை தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ க.இளங்குமரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு இவ்வமைச்சினால் கட்டம் I ல் 29 வீடுகளும் கட்டம் II ல் 34 வீடுகளும் வழங்கப்பட்டு கட்டுமானபணிகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ள உடன்படிக்கையின்படி, பின்வரும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நேரடியாகப் பூர்த்தி செய்கிறது: இலக்கு 1 (வறுமை ஒழிப்பு - No Poverty): விளிம்புநிலை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சொத்துரிமை மற்றும் உறைவிடத்தை வழங்கி வறுமையிலிருந்து மீட்டல். இலக்கு 6 (தூய நீரும் சுகாதாரமும் - Clean Water and Sanitation): வீடமைப்புடன் இணைந்ததாக நீர் வழங்கல் அமைச்சினால் சுத்தமான குடிநீர் மற்றும் முறையான சுகாதார வசதிகள் உறுதி செய்யப்படுதல். இலக்கு 11 (நிலையான நகரங்களும் சமூகங்களும் - Sustainable Cities and Communities): நலிவடைந்த சமூகங்கள் பாதுகாப்பான, மலிவுவிலையிலான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைப் பெறுவதை உறுதி செய்தல். தற்போதைய சவாலான பொருளாதாரச் சூழ்நிலையிலும், கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் அடிமட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் தனது தேசியக் கொள்கையில் அரசாங்கம் உறுதியாக பயணிக்கிறது என்பதை இச்செயற்றிட்டம் வெளிப்படுத்துகிறது. 
 WhatsApp Image 2026 06 04 at 9.56.19 AM WhatsApp Image 2026 06 04 at 9.56.21 AM 
தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2026.06.03 புதன்கிழமை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கௌரவ க .இளங்குமரன் (பா .உ ) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது . இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு. F. C சத்திய சோதி,சாவகச்சேரி நகரசபை தவிசாளர், உபதவிசாளர், சாவகச்சேரி பிரதேசபையின் தவிசாளர் , உபதவிசாளர் மற்றும் நகரசபை மற்றும் பிரதேச சபையின் அழைக்கப்பட்ட கௌரவ உறுப்பினர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள் /பிரதிநிதிகள், சாவகச்சேரி ,கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்கள், தென்மராட்சி பிரதேசம் பரந்த நிலப்பரப்பை கொண்ட 60 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி காணப்படுவதால் அதிகமான தேவைகளை கொண்டிருப்பதாகவும் இப்பிரதேச செயலகத்தை இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் தொழில் முயற்சிக்கான அரசகாணி வழங்கல் ,பிரதேச தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயற்றிட் டங்கள்,முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டிய பிரதேச சபையின் மற்றும் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள், வயல் காணியை வீட்டுத்திட்ட நோக்கத்திற்காக (குடியிருப்பு நோக்கத்திற்காக ) மேட்டுக்காணியாக மாற்றுவதற்கு விண்ணப்பித்த ஒருவருக்கான அனுமதி என்பவற்றிற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளநீர் தேங்கி நிற்கும் பகுதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . மேலும் 28.01.2026 அன்று இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் சுன்னாகம் சாவகச்சேரி பஸ் சேவையினை கொடிகாமம் வரை நீடித்தல் நெல்லியடி - கொடிகாமம் பஸ் சேவையினை சாவகச்சேரி வரை நீடித்தல், i - road செயற்றிடங்களில் உள்வாங்கப்பட்ட வீதிப்பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோக மார்க்கங்களை நிறுவுதல் ,கட ற்கரையோர கிராமங்களிற்கான குடிநீர் விநியோக விஸ்தரிப்பு, பிரதேசத்தில் பன்றி நெற்களையினை கட்டுப்படுத்துதல் , சாவகச்சேரி மற்றும் சரசாலை சித்த மத்திய மருந்தகங்களை தொடர்ச்சியாக இயங்கச் செய்தல் ,கச்சாய் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கை ,கைதடி நாவற்குழி மீனவர் கடலுக்குச் செல்லும் மற்றும் வலை உலர்த்தும் இடத்திற்கான மண் நிரப்புதல் வரணி குடத்தனை வீதிப் புனரமைப்பு பணிகள் தாமதமடைவதால் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், clean srilanka வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது . DCB நிகழ்ச்சித் திட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் 14செயற்றிட்டங்களிற்கு 3.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அமைச்சால் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கௌரவ இராமநாதன் அர்ச்சுனா (பா .உ ) அவர்களால் எமது பிரிவுக்குட்பட்ட நான்கு விளையாட்டுகழகங்களின் அபிவிருத்திக்காக தலா 2மில்லியன் ரூபாய் வீதம் 8மில்லியன் ரூபாய் வேலைத்திட்டம் முன் மொழியப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் அனுமதி கிடைக்குமிடத்து இவையும் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கௌரவ G.G. பொன்னம்பலம் (பா .உ ) அவர்களால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையை தரம் உயர்த்துதல் ,விசேட மருத்துவப் பிரிவுகளை உருவாக்குதல் அதற்கான மேலதிக ஆளணி கட்டமைப்புகளையும் சுயாதீன நிதிக்கையாள்கைக்கான தனியான கணக்காளர் நியமனம் தொடர்பாகவும் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையை இரண்டாக்க பிரித்து செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் மருத்துவ சுகாதார ஆளணி வெற்றிடங்களை பூர்த்தி செய்தல் தொடர்பாகவும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபையில் சமர்பிக்கப்பட்டதுடன் கொடிகாமம் வைத்தியசாலையின் ஆளணி வெற்றிடத்தை பூர்த்தி செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டமானது பி .ப 12.30 மணியளவில் பிரதேச செயலாளரின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
 WhatsApp Image 2026 06 08 at 10.18.21 AM WhatsApp Image 2026 06 08 at 10.19.32 AM 3  WhatsApp Image 2026 06 08 at 10.19.33 AM 
 
ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டம்: தென்மராட்சியில் மக்கள் பங்கேற்புடன் பூசைக்குளம் புனரமைப்புப் பணிகள் அங்குரார்ப்பணம்!
​ இலங்கை அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளுக்கு அமைவாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) நோக்கிய நகர்வை வலுப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் பூசைக்குளத்தினை புனரமைக்கும் செயற்றிட்டம் இன்று (03.06.2026) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
​இலங்கையில் பன்முக வறுமையை முற்றாக ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை சுயமாகக் கட்டியெழுப்பும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் 'ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்' எனும் தேசிய திட்டம் கடந்த 2026 ஜூன் 02 அன்று நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ​இதன் ஒரு கட்டமாக, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவின் J/343 வரணி இயற்றாலை கிராம அலுவலர் பிரிவில், பருத்தித்துறை – கொடிகாமம் பிரதான வீதிக்கு அருகாமையில், சிட்டிவேரம் அம்மன் கோவிலுக்கு வடக்கு பக்கமாக அமைந்துள்ள பூசைக்குளத்தினை புனரமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு (2026.06.03) புதன்கிழமை காலை 8:00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. சிட்டிவேரம் ஆலய குருவின் அருளாசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆரம்ப விழாவில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வரணி இயற்றாலை கிராம அலுவலர் பிரிவின் பிரஜாசக்தி உறுப்பினர்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய கிராம பிரிவுகளின் பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மக்களின் நேரடிப் பங்கேற்புடன் கூடிய (People's Participation) இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 5 மில்லியன் நிதிஒதுக்கீட்டில் பூசைக்குளத்தினை புனரமைப்பதற்காக அமைச்சினால் கொள்கையளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக் குளப்புனரமைப்பின் மூலம் கோடை காலத்தில் தங்கு தடை இன்றி கால்நடைகளுக்கான குடிநீர் கிடைப்பனவு உறுதிப்படுத்தப்படுவதுடன் நிலத்தடி நீர் பாதுகாப்பும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 WhatsApp Image 2026 06 04 at 9.55.29 AM WhatsApp Image 2026 06 04 at 9.55.29 AM 1
 WhatsApp Image 2026 06 04 at 9.55.29 AM 2 WhatsApp Image 2026 06 04 at 9.55.30 AM

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top