பிரமிட் திட்டங்களின் பரவலாக்கத்திற்கு எதிரான தேசிய விழிப்புணர்வு கலந்துரையாடல் மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலரினால் 18.08.2025 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

536268279 1964949741025981 1508188304736670732 n

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஹிமிகம(உரிமை) திட்டத்தின் இலவச காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(13.08.2025) காலை 9.00 மணிக்கு பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 300 இலவச காணி உறுதிப்பத்திரங்களும் , யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 32 இலவச காணி உறுதிப் பத்திரங்களுமாக மொத்தமாக 332 பயனாளிகளுக்கு இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான இ.சந்திரசேகரன், காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க, யாழ் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ரி.விமலன், சர்வமத தலைவர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பச்சிலைப்பள்ளி மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
533861764 1959624784891810 2220216485254548459 n

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான "ஒரிகாமி "பயிற்சி பிரதேச செயலாளர் தலைமையில் 30.07.2025 அன்று பி.ப 1.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது மாணவர்களின் நுண்ணியக்கத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் CCH நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வளவாளராக CCH நிறுவன உத்தியோகத்தர் கலந்துகொண்டார் இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் 60 பேர், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டார்.

 515106057 1946127972908158 2348102178346926931 n  525399839 1946127969574825 7893929625578499138 n

பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் 06.08.2025 ந் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் உதவிப் பணிப்பாளர், மாவட்ட காணிப்பயன்பாடு பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், வட்டார வன அலுவலர் வன பரிபாலன திணைக்களம், அபிவிருத்தி உத்தியோகத்தர் சாவகச்சேரி பிரதேச சபை, விவசாய போதனாசிரியர்கள், விவசாய விரிவாக்க நிலையம் சாவகச்சேரி மற்றும் கைதடி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கமநல சேவை நிலையம் சாவகச்சேரி மற்றும் கைதடி,  தொழில் நுட்ப உதவியாளர் கமநல சேவை நிலையம் கைதடி, Consultant Roadrid funcity Resort, தனங்கிளப்பு விவசாய சம்மேளனத் தலைவர் மற்றும் மீனவ சங்கத் தலைவர் , கிராம அலுவலர்கள் நாவற்குழி மேற்கு, தனங்கிளப்பு, கெற்பேலி, மிருசுவில் வடக்கு, கொடிகாமம் தெற்கு, கைதடி தெற்கு மற்றும் காணிக்கிளை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

4537105d dc34 402f 8b91 c7ee7fe22f6d

2025.07.29 அன்றைய தினம் J/294 நாவற்குழி கிராம சேவையாளர் பிரிவில் 16வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட ஆண் பெண் இருபாலர்களுக்கும் சாவகச்சேரி சுகாதார வைத்திய குடும்ப நல மேற்பார்வை உத்தியோகத்தரினால் வாழ்க்கைத்தேர்ச்சி பற்றிய விழிப்புணர்வு தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top