banner
 
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு.
1. நீதியமைச்சின் தொழிலாளர் தீர்ப்பாயம், சமாதான நீதவான், தீடீர்மரண விசாரணை, சத்தியப்பிரமாணத்திற்கான ஆணையாளர், அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள்
- தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகள்
2. காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் - காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்.
3. சட்ட உதவி ஆணைக்குழு - நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.,ஏதேனும் வழக்கு ஒன்றை தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையினை பெற்றுக்கொள்ளல்.
 
4.இழப்பீட்டுக்கான அலுவலகம்
- புனர்வாழ்வு அதிகாரசபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட பொதுமக்கள் சொத்திழப்பு, இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோவைகள் அரசாங்க ஊழியர் சொத்திழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரினால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும் மேலதிகமாக இவ் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்
-சுயதொழில் திட்டப் பயிற்சிநெறிகள் தொடர்பான விபரங்களை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.
 5.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்
- இந் நிறுவனத்தினால் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்மந்தமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 6. குற்றம் மற்றும் சாட்சியங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதிகாரசபை
- குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளவதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன் அதற்கமைய அவர்கள் தமது பிரச்சினைகளை இவ்விடத்தில் முன்வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- இத்திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 
7. ஆட்பதிவுத்திணைக்களம்
- புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும.
- ஏற்கனவே பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளமுடியும்.
- அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
 
8. பதிவாளர் நாயகத்திணைக்களம்
- காலம்கடந்த பிறப்பு இறப்பு திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் இது தொடர்பான மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
 
9. சமூக சீர்திருத்த அலுவலகம்
- சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
 
10. மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்
- அரச காணிகள் தொடர்பில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ளல்.
- அரச காணி தொடர்பில் ஏதேனும் பிணக்குகள் காணப்படின் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.
 
11. மத்தியஸ்தர் சபை
- மத்தியஸ்தர் சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல். (துண்டுப்பிரசுரம் மற்றும் வீடியோ கண்காட்சி)
- ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.
 
12. சிறைச்சாலைத்திணைக்களம்
- சிறைச்சாலை கைதிகள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
- சிறைச்சாலை அலுவலர்களுக்கான தொழில்தகைமை தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளல்
- கைதிகளை நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கான அறிமுகம்
 
13. சிறு தொழில் முயற்சி அபிவருத்திப்பிரிவு
- சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறும்.
 
14. தொழில் பயிற்சி அதிகாரசபை
- தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறும்.
 
மேலும், கடன் இணைக்க சபைத்திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, புனர்வாழ்வு ஆணையாளார் நாயகத்தின் அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் சேவைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது பிரதேச செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்த தான முகாமானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24.01.2022) இடம்பெற்றது.

FB IMG 1643013809372 IMG 134bd6e4eb38ed3f5419c7e592bd04de V

 

சமூகப்பணிக்குழு உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் 19.01.2022 ம் திகதி மு.ப 10.00 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எமது பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற( 18.01.2022) பொங்கல் விழாவின் பதிவுகள்.

IMG 20220118 105804 1  IMG 20220118 105843 1
 IMG 20220118 110102 1  IMG 20220118 105925 1
 IMG 20220118 WA0007 1  
எமது தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் செயற்பாடு 03.01.2022 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களினால் காலை 9 மணி அளவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து உறுதியுரை, வாழ்த்து செய்தி என்பனவும் இடம்பெற்றது. கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களினதும் சேவையை பாராட்டியதோடு நன்றியையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டார். 
WhatsApp Image 2022 01 03 at 12.11.46 PM 1 WhatsApp Image 2022 01 03 at 12.11.47 PM 2
WhatsApp Image 2022 01 12 at 3.04.36 PM 1 WhatsApp Image 2022 01 12 at 3.04.39 PM 1
WhatsApp Image 2022 01 12 at 3.04.39 PM WhatsApp Image 2022 01 12 at 3.04.40 PM

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top