கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் உள்ளூராட்சி அமைச்சின் வழிநடத்தலில் வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து நடாத்தும் "வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்" எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் கைதடி மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..
WhatsApp Image 2022 03 21 at 3.18.54 PM
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2022.03.20 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ( பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, இராஜாங்க கமத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர், யாழ்.மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியாகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
FB IMG 1647841576077  FB IMG 1647841584275  FB IMG 1647841615687 
 FB IMG 1647841629640  FB IMG 1647841636811  FB IMG 1647841594048
 FB IMG 1647841607772  FB IMG 1647841601697  FB IMG 1647841670940
தென்மராட்சி பிரதேச செயலகத்தால் World Vision நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட மகளீருக்கான போதை தொடர்பான விழிப்புணர்வு 15.03.2022 அன்று நாவற்குழி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் தென்மராட்சி உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. தமிழினி சதீஸ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுசபை வடமாகாண இணைப்பாளர் திருமதி.சியாமினி மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருட் தருப்பு நிலைய வடமாகாண இணைப்பாளர் திரு. கோடீஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
 
WhatsApp Image 2022 03 15 at 2.37.20 PM  WhatsApp Image 2022 03 15 at 2.37.21 PM 1  WhatsApp Image 2022 03 15 at 2.41.58 PM 
 WhatsApp Image 2022 03 15 at 2.37.22 PM  WhatsApp Image 2022 03 15 at 2.42.42 PM  WhatsApp Image 2022 03 15 at 2.37.21 PM

2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வும், பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் ”விற்பனையும் கண்காட்சியும்” நிகழ்வும் எமது பிரதேச செயலகத்தில் 16.03.2022 அன்று பிரதேச செயலாளர் திருமதி.உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை உள நல வைத்திய அதிகாரி திருமதி. வினோதா அச்சுதன் அவர்களும் , சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி திருமதி. த. பிரியங்கா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர், உலக தரிசன நிறுவனத்தின் முகாமையாளர்,பிரதிநிதிகள், கிராமிய மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

WhatsApp Image 2022 03 16 at 12.39.34 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.36 PM   WhatsApp Image 2022 03 16 at 12.38.33 PM
 WhatsApp Image 2022 03 16 at 12.38.31 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.27 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.23 PM 1
 WhatsApp Image 2022 03 16 at 12.38.23 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.17 PM 1  WhatsApp Image 2022 03 16 at 12.38.20 PM

முதியோர் தேசிய செயலகத்தின் நிதி பங்களிப்புடன் முதியோர் உயிர்வாழ தேவையான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலக சமூகசேவைபிரிவால் பயனாளிகளுக்கு கட்டில் மற்றும் மெத்தை போன்றன 2022.03.09 அன்று வழங்கி வைக்கப்பட்டது .

WhatsApp Image 2022 03 09 at 11.34.31 AM 1  WhatsApp Image 2022 03 09 at 11.34.31 AM 

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top