"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" என்னும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு இணங்க 2021 ஆம் ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 8.45 மணிக்கு இடம்பெற்றது.கோவிட் 19 காரணமாக மேற்படி கடமை செயற்பாடுகள் பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டன .மதிப்புக்குரிய பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இவ் நிகழ்வினை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.பிரதேச செயலாளர் திருமதி சு. உஷா அவர்களின் வாழ்த்து செய்தியினை தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் , நிர்வாக உத்தியோகத்தர்,நிர்வாக கிராம அலுவலகர், முகாமையாளர் -சமுர்த்தி தலைமை பீடம் ஆகியோர் வாழ்த்து செய்தியினை வழங்கினர். பொதுசுகாதாரப் பரிசோதகரினால் கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வு செய்தி வழங்கப்பட்டது. பிரதேச செயலாளர் அவர்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர் கொண்ட போதும் தென்மராட்சி பிரதேச மக்களிற்காக சேவையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களும் தனது நன்றிகளை தெரிவித்ததுடன் இனிவரும் காலங்களில் பொது மக்களிற்கான சேவையை நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஆற்ற வேண்டும் என்பதனை தெரிவித்தார்.
![]() |
![]() |
![]() |
யாழ் போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் குருதி வழங்கும் நிகழ்வானது 12/11/2020 வியாழக்கிழமை இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.
![]() |
![]() |
|
தென்மராட்சி பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா-2020, 28/08/2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி சு .உஷா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்திராக வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் திரு பா.முகுந்தன் ,சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க .விஜிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பிரதேச மட்ட ரீதியாக CRC விளையாட்டுக் கழகமானது முதலாம் இடத்தையும், கச்சாய் கலைமகள் விளையாட்டுக் கழகமானது இரண்டாம் இடத்தையும் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகமானது மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. தென்மராட்சி பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த புவிதரன் (கோல் ஊன்றி பாய்தல் ) விதுஷன் (400m ஓட்டம் ) ஆகியோரும் இன் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். |
|||
![]() |
|
![]() |
|
|
தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு மற்றும் நேர்முகத்தேர்வானது 02/09/2020 அன்று தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. |
|
![]() |
![]() |
| யூன் 08ம் திகதி உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு , வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நாற்றுமேடைகளிலிருந்து பெறப்பட்ட 200 மலைவேம்பு (மகோகனி) கன்றுகள் எமது பிரதேச செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 60 கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள பொது இடங்களில் நடுகை செய்யப்பட்டன . | |
![]() |
![]() |


























