| தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் 22.04.2020 அன்று வீசிய மினி சூறாவளியினால் மறவன்புலோ பகுதியில் பாதிக்கப்பட்ட 10 வீடுகளுக்குமான முற்பண கொடுப்பனவு 10000ரூபா அவர்களது வங்கி கணக்கிற்கு வைப்புச்செய்யப்பட்டது. |
| |
| தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் மிகவும் நலிவுற்ற 22 குடும்பங்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் ரூபா 3500 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 14.05.2020 அன்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கபட்டது. | ||
| |
|
|
![]() |
14.05.2020 அன்று கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி உதவியுடன் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் உதவி அவசியமான 6 கலைஞர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரூபா 10000 வழங்கப்பட்டன. |
Corona Virus ( Covid-19) தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்படும் தகவல்களுக்கு...
Corona Virus ( Covid-19) தொடர்பாக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் வெளியிடப்படும் தகவல்களுக்கு....
|
கொரோனா வைரஸ் தொற்று – COVID-19 விழிப்புணர்வு தொடர்பான முக்கிய அறிவித்தல் |
|||
| நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ( கொரோனா வைரஸ் தொற்று – COVID-19 ) காரணமாக தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு சேவையைப் பெற வருவோரும், சேவையை வழங்க வருவோரும் பின்வரும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. | |||
| 1. | இருமல், தும்மல், காய்ச்சல், தொண்டைவலி மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள்அலுவலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்கவும். | ||
| 2. | அத்தியாவசியத் தேவை இருப்பின் மட்டும் அலுவலகத்திற்கு வருகை தரவும். | ||
| 3. | பொது மக்களாகிய நீங்கள் ஒரு அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்து கொள்வதற்குஒருவர் மட்டும் வருகை தரவும். | ||
| 4. | முகக்கவசம் (Mask) அணிந்து வருகை தரவும். | ||
| 5. | அலுவலக வாயிலிலுள்ள நீர்க்குழாயில் உங்கள் கைகளை நன்றாக சவர்க்காரமிட்டுகழுவிய பின் உள் நுழையவும். | ||
| 6. | கூட்டமாகக் கூடியிருப்பதைத் தவிர்த்து இருவருக்கிடையில் குறைந்தது 1m தூரஇடைவெளியைப் பேணிக் கொள்ளவும். | ||
| 7. | இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாயினையும் மூக்கினையும்கைக்குட்டையினால் / ரிசுக்கடதாசி ஒன்றினால் /முழங்கையினால் மூடிக்கொள்ளவும். | ||


















