இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சாவகச்சேரிப் பிரதேச செயலகம், கைதடி சைவ ஐக்கிய சங்கம் , சிவபூமி திருவாசக அரண்மனை இணைந்து முன்னெடுத்த மகா சிவராத்திரி விழா நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை அரங்கில் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் அதிகாலை 4.30மணி வரை நடைபெற்றது .பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.பொ.குகதாசன், கௌரவ உப தவிசாளர் திரு.இ.யோகேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி நகர சபை கௌரவ உப தவிசாளர் திரு.ஞா.கிசோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.மகா சிவராத்திரி நிகழ்வுக்கான அருளுரையினைக் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கினார்கள்.வீரபத்திரர் அறநெறிப் பாடசாலை, மட்டுவில் இலஞ்சி ஆரணியம் அறநெறி பாடசாலை, கைதடி இயல்சேத்ரா கலைமன்றம், கைதடி பாரதி அறநெறி பாடசாலை, மட்டுவில் ஸ்ரீ நாராயணன் அறநெறி பாடசாலை, சாவகச்சேரி பழநி அறநெறி பாடசாலை, வீரகத்தி பிள்ளையார் அறநெறி பாடசாலை, கைதடி சைவ ஐக்கிய சங்கம் , லஜநாட்டியா நடனப்பள்ளி, கைதடி ஸ்ரீ நந்தகோபன் ஆர்வலன் பஜணைக்குழு , நீர்வேலி நீர்வைக் கந்தன் இதிகாசப் பாடசாலை , மட்டுவில் ஓம் நமசிவாய பஜனைக் குழு , பன்னாலையூர் தரன் பட்டிமன்றக் குழு, விவ பரத நடனப்பள்ளி மன்னார், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அறநெறி பாடசாலை, உரும்பிராய் ஜீவ ஜெயானந்த நர்த்தனாலயம் மற்றும் நல்லூர் ஸ்கந்தபதி கலாமன்றம் ஆகிய மன்றங்கள் இணைந்து கலைநிகழ்வுகளை வழங்கியிருந்தார்.
 WhatsApp Image 2026 02 18 at 14.03.38  WhatsApp Image 2026 02 18 at 13.58.38  WhatsApp Image 2026 02 18 at 13.58.36 1

சந்திரபுரம் J/315 கிராம அலுவலர் பிரிவில் 2026.02.13 வெள்ளிக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு சந்திரபுரம் சிறுவர் கழகத்தை வலுவூட்டும் நிகழ்வு சந்திரபுரம் கிராம அலுவலர் பணிமனை மண்டபத்தில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், சிறுவர் கழக நடைமுறைகள் தொடர்பான கருத்துக்களை சிறுவர் கழக சிறுவர்களிற்கு எடுத்துக் கூறினார்.

 WhatsApp Image 2026 02 16 at 09.52.27  WhatsApp Image 2026 02 16 at 09.52.28

தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் பொதுச்சபை நிறைவேற்றுக்குழுத் தெரிவுக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 11.02.2026 புதன்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலர், கணக்காளர், தலைமைப்பீட முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக செல்வி.சதாசிவம் நிலூஷிகா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

 632668286 2118470475673906 5277723467807230379 n  633852036 2118470269007260 1322156941403138957 n

யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 12.02.2026 பி.ப 12.30 மணிக்கு பாடசாலையா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு  12.02.2026 பி.ப 12.30 மணிக்கு பாடசாலைஅதிபர் தலைமையில் நடைபெற்றது.  இதில் மாணவர்களது ஒழுக்க மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 WhatsApp Image 2026 02 16 at 09.51.29  WhatsApp Image 2026 02 16 at 09.50.43

தென்மராட்சி பிரதேச செயலகம், நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகம், தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன STS வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய கண்பரிசோதனை முகாமானது 08.02.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் Dr.K.பத்மநாதன் அவர்களும், மாவட்ட கணனி தொழிநுட்ப ஆலோசகர், Dr.S.மனோகரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர். 230 வரையிலான பயனாளிகள் பங்குபெற்றி பயன்பெற்றதுடன் விசேடமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள தேவையுள்ளவர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களுக்கான சிகிச்சையினை அவசியத்தன்மையின் அடிப்படையில் நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இலவசமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது இந் நிகழ்வின் விசேட அம்சமாகும்.

 630881045 2116421305878823 1628008333414263720 n  630926065 2116421345878819 9067245564181488046 n  630558124 2116421422545478 228674059216511132 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top