தென்மராட்சி பிரதேச செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் ஒன்றிணைந்து வேலை தேடும் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு 2026.04.25 ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடாத்தப்பட்டது .இந் நிகழ்வில் தொழில் மற்றும் தொழில் பயிற்சி வழங்கும் அரச, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

 680459851 2183217105865909 1770207517317167919 n 682336789 2183216869199266 2943877981179215939 n  680997489 2183217022532584 7135177850572996773 n 
தென்மராட்சி பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (15.04.2026) காலை 9.45 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் F.C. சத்தியசோதி அவர்களுக்கு பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கைவிசேடத்தினை வழங்கி ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து பிரதேச செயலாளரினால் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டது.
 672677414 2172646366922983 1400651523559430144 n  671666678 2172625353591751 5448587500976217558 n 672677394 2172626140258339 8649854781985311614 n 
SLCBC AWARDS CEREMONY
Ceylon Chamber of Commerce கீழ் இயங்கி வரும் Canada Business Council ஊடாக (SLCBC Awards Ceremony) இலங்கை கனடா வர்த்தக சபையால் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளது எனவே இவ் விருதுகள் ஊடாக தெரிவு செய்யப்படும் முயற்சியாளர்களில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் கனடா வர்த்தக சபையால் 10 நாடுகள் ஒன்றிணைந்து வெளிநாட்டில் இடம்பெறும் வர்த்தக கண்காட்சியில் தமது பொருட்களை விற்பனை செய்வதற்கும் காட்சிப் படுத்துவதற்குமான அங்கீகாரம் வழங்கப்படும். இப் போட்டியில் பங்கு பெறுபவர்கள் வியாபார பதிவு செய்திருத்தல் வேண்டும். போட்டிக்கான விண்ணப்பப் படிவம் கட்டணம் எதுவும் அறவிடுவது இல்லை முற்றிலும் இலவசம்....
 
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கூட்டம்
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கூட்டமானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் 06.04.2026 மாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கெளரவ தலைவரின் இணைப்பாளர் திரு க.பிரகாஷ் மற்றும் Halo trust,world vision, sond, JSAC, vision global, பொன்னம்மா உதவும் கரங்கள் , கியூ டெக்- கரிதாஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் இந்நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 669012898 2167512094103077 3716093721200716436 n    668301049 2167512097436410 7172961725559200035 n

HWPL நிறுவனத்தின் 2026 Peace Educator Training for peace settlement in Srilanka அறிமுக நிகழ்வானது 09.03.2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. குறித்த சான்றிதழ் பயிற்சி நெறிக்கான அறிமுக நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை பீடம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் HWPL நிறுவனத்தின் Northern Sri Lanka General Director Guyomar Rayen , செயலாளர் Jenith Ramdas மற்றும் HWPL Nothern Srilanka நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 648778240 2141251390062481 4003763163925488690 n 649507662 2141191740068446 6031212264525418523 n  649471176 2141191796735107 8276480246340219677 n 

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top