சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் நிதி அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களுக்கான உளசமூக உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வானது 22.12.2025 திங்கட்கிழமை காலை 10.00 - 12.30 மணிவரை  யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட செயற்றிட்ட குழுவினர்  கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வில்  உளவளத்துணை உத்தியோகத்தர்கள் பெண்கள் அபிவிருத்தி  உத்தியோகத்தர் மற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு  கட்டிளமைப்பருவத்தில் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான வழி முறைகள் தொடர்பான கருத்துக்களும் வழங்கப்பட்டன.  

 WhatsApp Image 2025 12 23 at 15.44.30

சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் நிதி அனுசரணையுடன் சிறுவர் இல்ல சிறார்களிற்கான உளசமூக உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வானது 19.12.2025 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 - 4.30 மணிவரை கைதடி சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக. சமுதாய சித்த மருத்துவர்களான Dr K. றஜித்தா, Dr S. ஜான்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வில் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் 

 WhatsApp Image 2025 12 23 at 15.06.52    WhatsApp Image 2025 12 23 at 15.06.53
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான பெறுகை தொடர்பான பயிற்சி நெறியானது இன்றைய தினம் 22.12.2025  மு.ப 10.30 க்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில்  ஆரம்பமானது.
இப்பயிற்சி நெறியின் வளவாளராக  யாழ்ப்பாண மாவட்ட செயலக கணக்காளர்(பெறுகை அலகு) வ.சுபாசன் அவர்கள் கலந்து கொண்டதுடன்   இப்பயிற்சி நெறியில் எமது பிரதேச செயலகத்தின்  உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
 WhatsApp Image 2025 12 23 at 15.06.03    WhatsApp Image 2025 12 23 at 15.06.04

இன்று கைதடி சித்த மருத்துவ பீடத்தினரால் பிரதேச செயலாளர் தலமையில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்ட து. அத்துடன் சமூக சித்த மருத்துவர்களால்  இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 

 WhatsApp Image 2025 12 23 at 15.06.25 1   WhatsApp Image 2025 12 23 at 15.06.25 2 

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொடிகாமம் சமுர்த்தி வங்கியின் போதைப்பொருள் எதிர்ப்பு கொடிதின சேமிப்பு நிதியிலிருந்து உசன் கிராமபிரிவை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கான 42,500.00 ரூபா மற்றும் 42,000.00 ரூபா பெறுமதியான  இரண்டு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 19.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 1.00 மணிக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கொடையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2025 12 23 at 16.13.13    WhatsApp Image 2025 12 23 at 16.13.55

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top