சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையுடன் நாவற்குழி மேற்கு,நாவற்குழி தெற்கு மற்றும் மந்துவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள பெற்றோர்களுக்கான கிராம மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு, பெண்களுக்கான வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கு 12.12.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 -1.00 மணிவரை நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.இதில் வளவாளராக S.சிவதாஸ் (உளநல மருத்துவர்) கலந்துகொண்டார்.இந் நிகழ்வில் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள்,கிராமமட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 

 601859098 2071038413750446 1705945740552889451 n 601352971 2071038540417100 4660250573009491999 n  

Fairmed நிறுவனத்தின் அனுசரணையுடன் மாற்றுவலுவுள்ளோரை பராமரிப்பவர்களுக்கான உள சமூக ஆற்றுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பிரதேச செயலாளர் திரு பிரான்சிஸ் சந்திரா சத்யசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.12.2025 இன்று இடம்பெற்றது,இந்நிகழ்வின் வளவாளராக மருதங்கேணி அம்பன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க. சிவசுதன் பங்குபற்றி கருத்துரை வழங்கினார் இந்நிகழ்வில் 30 மாற்றுவலுவுள்ளவர்களை பராமரிப்பவர்களும் பங்குபற்றியிருந்தனர். 

 600196389 2071037240417230 7064184706826674792 n    599709897 2071037303750557 2264955789156286768 n

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் கழகங்களினை வலுப்படுத்தல் மற்றும் தலைமைத்துவம் மற்றும் இணைய பாவனை தொடர்பான பயிற்சி செயலமர்வு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 05.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதிகல்விப் பணிப்பாளர் ,சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமமட்ட சிறுவர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் வளவாளராக தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் ப.பரணீதரன் சிறந்த முறையில் பயிற்சியளித்தார்.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற "தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம்" 2025-2027ம் ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்ட Clean Sri lanka வேலைத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற சமுதாய உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம திட்டத்தில் எமது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்குமான அடிப்படை விழிப்புணர்வு மற்றும் கிராம அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் தொடர்பான நிகழ்வு 16.12.2025 ஆம் திகதி பி. ப 2.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் மந்துவில் கிழக்கு முன்பள்ளியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மதகுரு, பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரின் இணைப்பாளர், தினணக்களம் சார் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகள், 50 குடும்பங்கள் சார் அங்கத்தவர்கள் மற்றும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.  

599838376 2071035670417387 8561485509539369261 n

 

சமுர்த்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் கெற்பேலி கிராம பிரிவில் [1,000,000] ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வீடுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தோ.தேவராசா அவர்களின் இல்லத்தில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா 27.11.2025 வெள்ளி மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், வங்கி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top