பொது மக்கள் சேவைக்காக மீண்டும் கிடைத்த அங்கீகாரம்....
2025/2026 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கான போட்டியில் எமது பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் மற்றும் 2025 ஆம் ஆண்டு இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் பணச் சேகரிப்பு அடிப்படையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் மற்றும் பயனாளிகள் இணைப்பில் தேசிய மட்டத்தில் தகுதி பெற்றமைக்கான விருதுகளை கொண்டாடும் தருணம்......
விருது பெற்றமையை கொண்டாடும் நிகழ்வானது 18.11.2026 ஆம் திகதி பி. ப.3.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலாளர் உயர்திரு ம.பிரதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு. பா.பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டனர் .மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய மாவட்ட செயலாளர் ,மக்களிற்கான வினைத்திறன் மிக்க சிறந்த சேவையை வழங்கி கொண்டிருக்கும் ஒற்றுமையும் சிறந்த தலைமைத்துவத்துவமும் கொண்ட எமது அனைத்து பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் எமது பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் பணச் சேகரிப்பு அடிப்படையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பயனாளிகள் இணைப்பில் தேசிய மட்டத்தில் தகுதி பெற்றமைக்காகவும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த திட்டம் ஊடாக உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தோடு பொதுமக்களுக்கு கிடைக்கும் பயன்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என தெரிவித்ததோடு உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகளும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
e - certificate முறை மூலம் மாவட்ட ரீதியில் அதிகளவிலான பிறப்புச்சான்றிதழ்களை வழங்கிய மேலதிக மாவட்ட பதிவாளர் திரு p . அயூரன் அவர்களுக்கும் ,Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் Digital e - System வேலைத்திட்டங்களை ஆற்றிய தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி த. சுபா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு த. யாதவன் மற்றும் திரு. றெமி ஆனந்த் அவர்களுக்கும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ச. பிரியா, ஸ்ரீ. நிலானி, த. வாகீசா அவர்களுக்கும் எமது பிரதேச செயலாளரினால் சிறப்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் தான் இவ் விருதினை பெற்றுக்கொள்ள முடிந்தது என்றும் குறிப்பட்டார் . இந்த நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் பணச் சேகரிப்பு அடிப்படையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பயனாளிகள் இணைப்பில் தேசிய மட்டத்தில் தகுதி பெறுவற்கும், 2025/2026 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் எமது பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெறுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் மெச்சுரைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்தோடு மாவட்ட செயலாளர் அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களால் நினைவுப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது .
 18  914528269 2378188536368764 2729703155089080459 n

News & Events

19
නොවැ2026
பொது மக்கள் சேவைக்காக மீண்டும் கிடைத்த அங்கீகாரம்....

பொது மக்கள் சேவைக்காக மீண்டும் கிடைத்த அங்கீகாரம்....

பொது மக்கள் சேவைக்காக மீண்டும் கிடைத்த அங்கீகாரம்....2025/2026 ஆம்...

18
නොවැ2026
சுய தொழில் உதவிக்கான மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு

சுய தொழில் உதவிக்கான மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாவற்குழி...

Scroll To Top