மாற்றுத்திறனாளிகளுக்கான யாழ்ப்பாண மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப்போட்டி 09.06.2026 ஆம் திகதி அன்று இடம் பெற்றது. இதில் சாவகச்சேரி சிவபூமி பாடசாலையிலிருந்து கலந்து வெற்றியீட்டிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 02.07.2026 இன்று சிவபூமி பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.இதில் தென்மராட்சி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து வீரவீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் என்பன வழங்கி கெளரவித்தனர்.

                                                                                                    WhatsApp Image 2026 07 02 at 3.07.30 PM

தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது தலைமையக முகாமையாளர் தலைமையில் 23.06.2026 செவ்வாய்க்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் முகாமைத்துவப்பணிப்பாளர், கருத்திட்டமுகாமையாளர், வங்கிமுகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான கெக்குலு சிறுவர் கழக போட்டி , போதை ஒழிப்பு சேமிப்பு வேலைத்திட்டம் மற்றும் குடும்ப வலுப்படுத்தல் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பாக பிரிவு ரீதியாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 WhatsApp Image 2026 07 01 at 11.11.06 AM  WhatsApp Image 2026 07 01 at 11.11.06 AM 1

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான ஆலோசனையும் வழிகாட்டலும் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 24, 25.06.2026 ஆம் திகதிகளில் தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன .

 WhatsApp Image 2026 06 30 at 9.52.10 AM  WhatsApp Image 2026 06 30 at 9.52.10 AM 2
 WhatsApp Image 2026 06 30 at 9.28.32 AM  WhatsApp Image 2026 06 30 at 9.28.34 AM

மக்கள் பங்குபற்றுதலுடன் கிராம மட்ட காணிப்பயன்பாட்டு திட்டம் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் தலைமையில் கைதடி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நவபுரம் சனசமூக நிலையத்தில் 24.06.2026ம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பல திணைக்களங்கள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 WhatsApp Image 2026 06 30 at 9.28.52 AM  WhatsApp Image 2026 06 30 at 9.28.54 AM
 WhatsApp Image 2026 06 30 at 9.28.52 AM 1  WhatsApp Image 2026 06 30 at 9.28.55 AM

கோவை முகாமைத்துவத்தினூடாக உற்பத்தி திறனை மேம்படுத்தல் பயிற்சி நெறியானது 26.06.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி தொடக்கம் ந.ப 12.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லாகினி நிரூபராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுரையாளர் இராசையா தனுஷன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

 735346690 2241593160028303 3177883492831694432 n 735180829 2241593306694955 875409372198871540 n 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top