சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சர்வதேச மகளீர் தின விழாவானது கொடிகாமம் வங்கிக்குட்பட்ட யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலயத்தில் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி தலைமையில் ஆரம்பமாகியது . இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மேலதிக மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய க.சிவகரன் அவர்களும் விருந்தினர்களாக பாடசாலை அதிபர் திரு.க. கோடீஸ்வரன் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் திருமதி.ஆ.உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்து மங்கள  விளக்கேற்றலினை தொடர்ந்து இறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையினை சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி.ஜெ.வசந்தி அவர்களும் தலைமையுரையினை பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும் விருந்தினர் உரையினை முகாமையாளர் திருமதி.ஆ.உமாதேவி அவர்களும் அதிபர் திரு.க.கோடீஸ்வரன் அவர்களும் பிரதம  விருந்தினர் உரையினை  மேலதிக மாவட்ட செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். பிரதம விருந்தினர் தனது உரையில் பெண்கள் சுய தொழில்களை மேற்கொள்வதன் மூலம் தமது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த முடியும் என கூறினார். அத்துடன் மகளீரிற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்தது விளங்க தனது வாழ்த்துக்களையும்   தெரிவித்தார். தொடர்ந்து மகளீரிற்கான விளையாட்டு நிகழ்வுகள் மைதானத்தில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றியாளர்களிற்கான பரிசில் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து கொடிகாமம்  வங்கிக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் ( புத்தகப்பை) வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

 WhatsApp Image 2026 03 09 at 11.54.52 WhatsApp Image 2026 03 09 at 11.55.06 

"முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப் பொருளை தடுப்பதற்கான வாரத்தை முன்னிட்டு 05/03/2026 தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சாவகச்சேரி நகரம் மற்றும் கோவில் குடியிருப்பு பிரதேசங்களில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடும்ப நலஉத்தியோகத்தர், பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2026 03 05 at 15.06.05 2  WhatsApp Image 2026 03 05 at 15.06.06 1
இலவச கண் சத்திரசிகிச்சை முகாம். தென்மராட்சி பிரதேச செயலகம், நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகம், தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன STS வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை STS வைத்தியசாலையில் நடைபெற்றது.கடந்த 08.02.2026 அன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் அவசியம் கண்புரை சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டியவர்களாக இனங்காணப்பட்ட 35 நோயாளிகளுக்கும் மேலதிகமாக முன்பு இனங்காணப்பட்ட 7 நோயாளிகளுக்குமாக 42 பேருக்கு மேற்குறித்த சத்திரசிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது.இவர்களுள் பலர் தமக்கு பார்வை குறைபாடு இருப்பதை அறிந்திருந்த போதிலும் வைத்தியசாலைக்கு சென்றிருக்கவில்லை. நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச செயலாளரினால் கிராம அலுவலர்கள் ஊடாக பயனாளிகள் இனங்காணப்பட்டு கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சையினை Dr.S.T.சந்திரகுமார் அவர்கள் தனது STS வைத்தியசாலை ஊடாக வழங்கியிருந்தார் .
 WhatsApp Image 2026 03 03 at 10.15.49 WhatsApp Image 2026 03 03 at 10.15.50 1 

"முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான வாரத்தை முன்னிட்டு 03/03/2026 தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவித்தல் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

 WhatsApp Image 2026 03 03 at 14.05.49 1  WhatsApp Image 2026 03 03 at 14.05.49
2026ம் ஆண்டின் முதலாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் 24.02.2026 ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு. F.C சத்தியசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திரு. செ. ரமேஸ்குமார் பிரதம உள்ளக கணக்காய்வாளர், திருமதி.வி.பிறேமதாஸ் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், பிரதேசசெயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், விடய உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் இவ்வாண்டிற்கான முதலாவது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இது எனவும் பிரதேச செயலகத்தின் நிதி, நிர்வாக, செயற்பாடுகள் நிதிபிரமாணங்கள், தாபன விதிகளுக்கமைவாக உள்ளக கட்டுப்பாட்டினை சிறந்த முறையில் பின்பற்றி பிரதேச செயலக செயற்பாடுகளின் தவறுகளை திருத்தம் செய்வதுடன் இனிவரும் காலங்களில் குறித்த தவறுகள் மீளவும் ஏற்படாமல் வினைத்திறனாக செயற்படுவது அவசியமாகும் என்பதுடன் பொது கணக்காய்வு ஐயவினாக்களை குறைப்பதற்கு உள்ளக கணக்காய்வு செயற்பாடு அவசியமெனவும் குறிப்பிட்டார்.
பிரதம உள்ளக கணக்காய்வாளர் மாவட்ட மட்டத்தில் உள்ளக கணக்காய்வின் செயற்பாடு தேசிய கணக்காய்வின் அவதானிப்புகளை குறைப்பதுடன் மீளவும் ஒரே தவறுகள் எழாமல் வினைத்திறனாக செயற்படவேண்டுமென அரசாங்க அதிபரும் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் வருடாந்த கணக்காய்வு திட்டம் வருட ஆரம்பத்தில் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கும் சமர்ப்பிப்பதனால் உள்ளக கணக்காய்வு மற்றும் தேசிய கணக்காய்வு உடன்பாட்டுடன் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் பெறுகை நடைமுறை, சமூகபாதுகாப்புத் திட்டம், நிதிநடைமுறைகளில் கூடுதலான அவதானம் செலுத்த வேண்டுமெனவும் கூறினார். அலுவலக கடமை அசைவுகள் களவிஜயம் போன்றன தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டுமெனவும் கூறினார். தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் கருத்து தெரிவிக்கையில் பொது கணக்காய்விற்கான பதில்கள் திருப்தியாக வழங்கப்படல் வேண்டும் எனவும் மேலும் சமூக பாதுகாப்பு நிதிய முன்னேற்றச் செயற்பாட்டுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் பொருளாதார மத்திய நிலைய செயற்பாடுகள் முழுமையடைதல் வேண்டும் எனவும் இலவச மின்விநியோகம், வீட்டுத்திட்டம் போன்றனவற்றின் இறுதி முடிவுகள் உறுதிப்படுத்தப்படல் வேணடுமெனவும் குறிப்பிட்டார். இத்துடன் சென்ற வருட முன்னேற்ற அறிக்கை Presentation மூலம் காட்சிப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டதுடன் 11.00 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
 WhatsApp Image 2026 02 27 at 09.35.58 1  WhatsApp Image 2026 02 27 at 09.35.57

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top