2026ம் ஆண்டின் இரண்டாவது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் கடந்த 27.05.2026
புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திருமதி.வி.பிறேமதாஸ் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர், திரு. எஸ்.ரமேஸ்குமார் மாவட்டச் செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதித்திட்டமிடல்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்திதலைமைப்பீட முகாமையாளர், பிரதேசசெயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராமஅலுவலர்கள், கிராமமட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தியோகத்தர் அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டதுடன் உத்தியோகத்தர்கள் அனைவரும் வினைத்திறனுடன் வேலை செய்வதனால் எமக்குக் கிடக்கின்ற கணக்காய்வு விசாரணைகளை குறைத்துக் கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இக் கூட்டத்தில் பிரதம உள்ளகக்கணக்காய்வாளரால் மாவட்டச் செயலக கால அட்டவணையின்படி இக் கூட்டத்தினை நடத்தியமைக்காக பிரதேச செயலாளருக்கு நன்றிகளைக் தெரிவித்ததுடன், புதிய பிரதேச செயலாளர் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் கணக்காய்வு அவதானிப்புக்கள் குறைந்துள்ளதுடன் இவ்வாண்டு முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இறுதியாக தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் குறிப்பிடுகையில், குறிப்பிட்ட காலாண்டுக்கான கணக்காய்வு அவதானிப்புக்களுக்கான பதில்கள் இம்முறை திருப்திகரமானதாகவும் இவ்வாண்டு முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
 
 
 WhatsApp Image 2026 05 27 at 5.03.44 PM

 WhatsApp Image 2026 05 27 at 5.03.44 PM 1

"அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான  சுற்றுலாத்தளம்"  என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்விற்கமைய, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் J/301 கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் லிகோரியார் தேவாலயத்தை அண்மித்த கடற்கரைப் பிரதேசமும் J/ 299- தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த கடற்கரை பிரதேசமும் சிரமதானம் மூலம் துப்புரவாக்கப்பட்டது. லிகோரியார் தேவாலயத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாத்துறைக்கு முதன்மையான விடயமாக காணப்படும் இலங்கையின் அழகிய நீண்ட கடற்கரையை தூய்மையானதாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி நகர சபையின் வட்டார உறுப்பினர், பொதுச் சுகாதார பரிசோதகர்,பிரஜாசக்தி தலைவர், சாவகச்சேரி நகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்."அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான  சுற்றுலாத்தளம்"  என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்விற்கமைய, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் J/301 கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் லிகோரியார் தேவாலயத்தை அண்மித்த கடற்கரைப் பிரதேசமும் J/ 299- தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த கடற்கரை பிரதேசமும் சிரமதானம் மூலம் துப்புரவாக்கப்பட்டது. லிகோரியார் தேவாலயத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாத்துறைக்கு முதன்மையான விடயமாக காணப்படும் இலங்கையின் அழகிய நீண்ட கடற்கரையை தூய்மையானதாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி நகர சபையின் வட்டார உறுப்பினர், பொதுச் சுகாதார பரிசோதகர்,பிரஜாசக்தி தலைவர், சாவகச்சேரி நகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம் பெற்ற நிகழ்வில் தனங்கிளப்பு பொதுமக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2026 05 23 at 3.14.25 PM 1 WhatsApp Image 2026 05 23 at 3.14.29 PM 1

 

தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலாளர் எவ்.சி.சத்தியசோதி தலைமையில் வியாபாரத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான வியாபாரத் திட்டமானது ( வியாபார நடவடிக்கை தொடர்ச்சியான வரவு செலவு, வளங்களினை திட்டமிடல் மற்றும் சந்தைப்படுத்துதல்) 20 உள்ளூர் முயற்சியாளர்களுக்கு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இவ் வியாபார திட்டமானது (Business plan) 05.05.2026ம் திகதி உள்ளூர் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிக்கும் நுண்கடன் திட்டம் பெறுவதை நோக்கமாகவும் மற்றும் தமது வியாபாரத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்ப தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
 690641084 2191161121738174 6078325433975453226 n 689456250 2191161231738163 4924276098233399959 n 
கிராமிய காணி பயன்பாட்டு அபிவிருத்தித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் உதவிப்பிரதேசசெயலர் தலைமையில் கரம்பகம் கிராம உத்தியோகத்தரின் பங்களிப்புடன் கரம்பகம் கிராம செயலகத்தில் 15.05.2026 அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் காணிப்பயன்பாடு தொடர்பான திட்டங்கள் ஆராயப்பட்டதோடு வீதிகள், வீதி மின்விளக்குகள், புகையிரதநிலையக்கடவை, வாய்க்கால்கள், குளங்கள், கல்வி, விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு போன்றவற்றிற்கான அபிவிருத்திகள் தொடர்பான ஆலோசனைகளும் வழிமுறைகளும் துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்களினால் பொதுமக்களிற்கு வழங்கப்பட்டது
"தமக்கென ஒரு இடம் -அழகான வாழ்க்கை" என்ற தொனிப் பொருளின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள குடியமர்ந்த மக்களில் நீண்ட காலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு பாதுகாப்பானதொரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்தில் வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலை திட்டம் தென்மராட்சியில் 2026.01.16 வெள்ளிக்கிழமை அன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி பங்களிப்பில்( ஒரு வீட்டிற்கு ரூபாய் இரண்டு மில்லியன்) மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேலைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல் 2026.01.16 அன்று J/318 -மீசாலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் சம்பிரதாயபூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நாட்டப்பட்டது. அப்பயனாளியினால் பூரணப்படுத்தப்பட்ட வீட்டின் புதுமனை நிகழ்வு 2026.04.28 செவ்வாய்க்கிழமை இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் (பா.உ) அவர்களும் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களும் தென்மராட்சி பிரதேச செயலாளர் உயர்திரு F.C சத்தியசோதி அவர்களும் உதவி பிரதேச செயலாளர் திருமதி நி.லாகினி அவர்களும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு இ.திலீபன் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
 683183432 2184195845768035 1330695508052176774 n 680412604 2184196029101350 7320336675214571361 n 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top