அரச மொழிகள் திணைக்களத்தால் அரச உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற 150 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு 23.04.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி சு. உஷா தலைமையில் வரணி கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பயிற்சியை நிறைவுசெய்த உத்தியோகத்தர்களிற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு.மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.மேலும் இந் நிகழ்வில் அரச கரும மொழித்திணைக்களப் பணிப்பாளா் பிறின்ஸ் சேனாதீர, மேலதிக அரசாங்க அதிபர், அரச கரும மொழித்திணைக்கள இணைப்பாளர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சிநெறியை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிங்கள பயிற்சிநெறி வளவாளர்கள் பிரதேச செயலாளர் மற்றும் அரச கரும மொழித்திணைக்களப் பணிப்பாளா் பிறின்ஸ் சேனாதீர அவர்களாலும் கௌரவிக்கப்பட்டனர்.
 176994918 916858062501826 4622398369628716401 n  179314282 916857885835177 891881740573827269 n
 181106578 916857985835167 7527136622745583956 n  179703112 916858072501825 7367799207738203670 n

கடந்த ஆண்டு(2020) மார்கழி மாதம் 22ஆம் திகதி மாங்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த கொடிகாமம் மத்தியை சேர்ந்த விஜயந்தன் அவர்களின் குடும்பத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட இழப்பீட்டு கொடுப்பனவாக ரூபா 500 000 பெறுமதியான காசோலை உதவி பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.

181135090 916870659167233 5899899661065761528 n

 

சாவகச்சேரி இந்து கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்து உயர்தரம் செல்ல இருக்கும் மாணவர்களுக்கான உயர் தர பாடநெறியை தெரிவு செய்வதற்காக , "தொழிலிற்கான திறவுகோல்"- (Career Key )என்னும் பரீட்சை ஊடாக தமது தொழில் துறையை தேர்வு செய்யும் நிகழ்வானது எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் யாழ் மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் 08.04.2021 அன்று சாவகச்சேரி இந்து கல்லூரியில் நடைபெற்றது .இவ் நிகழ்வில் சுமார் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 182329631 916883989165900 1548839292399998735 n  

181857830 916884015832564 1729852231820424852 n

பிரதேச செயலக மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களினால் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 23,24.04.2021 ஆம் திகதிகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இவ் செயலமர்வில் தனியாள் விருத்தி ,ஆளுமைமிக்க ஆசிரியராக மாறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக வளவாளர்களால் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
 
 181033742 916878852499747 850751669274869410 n 180501214 916878972499735 6810509579538766238 n 
"சிறுவர் அழகிய கலைச்சமூகம்" நிகழ்வானது 09.03.2021 இன்று கோவிற்குடியிருப்பு J/301 புனித லிகோரியார் தேவாலய முன்றலில் காலை 10 மணியளவில் கிராம உத்தியோகத்தர் தலைமையில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பங்குத்தந்தை, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர், பட்டதாரி பயிலுனர்கள், நகரசபை உறுப்பினர் மற்றும் கிராமத்தின் சிறுவர்களது (10தொடக்கம் 18வயதையுடையவர்கள்) பங்குபற்றலோடு நடைபெற்றது.
156573352 883166095871023 936056408790990634 o    156786860 883166112537688 5470256034160567244 o

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top