இந்து கலாசாரதிணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு தென்மராட்சிப் பிரதேசத்தில் இயங்குகின்ற இருபத்தியாறு அறநெறிப்பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கிடையில் 2018 ஆம் ஆண்டு இந்துகலாசார திணைக்களத்தினால் நடாத்தப்பட்டதேசிய ஆக்கத்திறன் பிரதேசமட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 21.06.2019 வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு உதவிப் பிரதேசசெயலர் க.வினோஐிதா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூறு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இச் சான்றிதழ்களை இந்துகலாசார திணைக்களம் வழங்கியிருந்நது.

 

65232257 2853875201295616 1761050120230535168 o

 

 

65107115 2853875027962300 1575664642947022848 n     65489199 2853875081295628 4471948063451119616 n  

 

65436702 2853875357962267 1704178499759112192 n     65088317 2853875441295592 8938205076191707136 n

 

65593088 2853875521295584 7541361048721293312 n      65388075 2853875934628876 5871762486008479744 n

 

போதையற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற செயற்றிட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விழிப்புணர்வு வார பல்வேறு செயற்பாடுகளில் இன்று 26.06.2019 பிரதேசெயலகம் ,சுகாதாரதிணைக்களம், சாவகச்சேரி நகரசபை, பிரதேசசபை,மதுவரித்திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து சமுர்த்தித் திணைக்களத்தின் ஒழுங்மைப்பில் இன்றைய நிகழ்வாக போதைக்கெதிரான ஊர்வலமும் விழிப்புணர்வு தெருநாடகமும் சிறப்புரையும் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வு காலை பத்து மணியளவில் பிரதேசசெயலகத்துக்கு முன்னால் இருந்து பிதேசசெயலரின் தலைமையில் ஊர்வலம் ஆரம்பமாகியது . இந்த ஊர்வரலம் சாவகச்சேரி பேரூந்து நிலையம் சென்றடைந்து அங்கிருந்து நகரசபை மைதானத்துக்கு சென்றடைந்தது பின்னர் பிரதேசசெயலரின் உரை இடம் பெற்றது. அதன் பின்னர் பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது. மேற்படி ஊர்வலத்திலும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளிலும் பாடசாலை மாணவர்களும் இடம்பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தககது.
வீதி நாடகத்தினைத்தொடர்ந்து பிரதேச சபையின் தவிசாளர் உரை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து போதைக்கெதிரான விழிப்புணர்வு தொடர்பான சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்கள்பறக்க விடப்பட்டது. இறுதியாக உதவித்திட்டமிடல் பணிப்பாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

 

b       Capture 
 65448578 2854486187901184 8179640154374275072 n 65150193 2854486327901170 2553230380979191808 n
   

தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.05.2019 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு  அனைத்து அலுவலர்களுக்குமான வாக்குரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு  உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
   
 9  7

கிராம சக்தி கருத்திட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  தலைமையில்  தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.05.28 ம் திகதி செவ்வாய் கிழமை  பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சக்தி சங்க அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

44

 

 

தமிழ் - சிங்கள புதுவருடத்தை கொண்டாடும் முகமாக 17.04.2019 அன்று தென்மராட்சி பிரதேச செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

 

tp

tp2tp3

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top